கைவிடல்
நான் அவளைக் கண்டேன்
நான் அவளைச் சதுக்கத்திற் கண்டேன்
நான் அவளைச் சதுக்கத்திற் குருதிசொட்டக் கண்டேன்
நான் அவளைச் சதுக்கத்திற் கொலையுண்ணக் கண்டேன்
நான் அவளைக் கண்டேன்-நான் அவளைக் கண்டேன்
இவளது பாதுகாவலன் யாரென்று
அவன் கத்தியபோது
நான் அவளை அறிவேன் என்பதை மறுத்தேன்
நான் அவளைச் சதுக்கத்தில் விட்டுச்சென்றேன்
நான் அவளைச் சதுக்கத்தில் குருதிவழிய விட்டுச்சென்றேன்
நான் அவளைச் சதுக்கத்திற் தடுமாற விட்டுச்சென்றேன்
நான் அவளைச் சதுக்கத்திற் சாக விட்டுச்சென்றேன்
நான் அவளைச் விட்டு.........
Samih-al-Qasim (தமிழில் சி.சிவசேகரம்)
******

நிபுணர்கள்
சந்தர்ப்பவாதிகளே
சந்தர்ப்பவாதத்தை
இழிவு செய்யுஞ்
சந்தர்ப்பங்கள் உண்டு
அவர்கள் சொல்வதை நம்புங்கள்
ஏனெனில் அவர்களே
எவரினும் மேலாகத்
தாம் சொல்வது என்னவென அறிவார்கள்
அவர்களை நம்பாதீர்கள்
ஏனெனில் அவர்கள்
சந்தர்ப்பவாதத்தின் காரணமாகவே
சந்தர்ப்பவாதத்தை இழிவு செய்கிறார்கள்
Erich Fried (தமிழில் சி.சிவசேகரம்)
கேள்வி 1. துரோகிகள் அடையக்கூடிய மிகப்பெரிய லாபம் எது?
அ) தாங்கொணா துயற்ற மக்களின் பிளந்த இதயத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட கோடிக்கணக்கான கேவல்களின் ஒலி
ஆ) இரத்தத்தால் நனைக்கப்பட்டு எதிர்பார்ப்பால் உலர்த்தப்பட்ட வாய்க்கரிசி
இ) எவரது பார்வையிலும் படாத அவர்களது கடைசி துளி கண்ணீர்

No comments:
Post a Comment