Wednesday, April 29, 2009

இரயில் மோதல் - நாச வேலையா, தேர்தல் வேலையா?


இரயிலை இயக்க பயிற்சி பெற்ற, தப்பிக்கத் தெரிந்த, நான்கு சாவிகளும் கிடைக்கப் பெற்ற நபரே இதைச் செய்திருக்க முடியும். ஓம் நமோ நாராயணாய நமஹ!


1. இந்த நாசவேலை மிகப்பெரிய விபத்தாக மாறியிருந்தால் அதனால் பயன்பெறக்கூடியவர்கள் யார்?

2. ஈழப்பிரச்சனை குறித்த மக்கள் கவனம் இதில் குவிந்திருக்குமா?
ஈழம் அமைக்க ஜெ இந்திய ராணுவம் அனுப்புவேன் என்பது 8ம் பக்கச் செய்தியாக மாறியது யாருக்கு லாபம்?

3. மின்சார இரயிலை இயக்க அனுவம் கிடைத்தல் யாருக்கு அதிக சாத்தியம் உள்ளது?

Thursday, April 9, 2009

40 ஆயிரம் வாய்க்கரிசி மூட்டைகள்


கைவிடல்

நான் அவளைக் கண்டேன்
நான் அவளைச் சதுக்கத்திற் கண்டேன்
நான் அவளைச் சதுக்கத்திற் குருதிசொட்டக் கண்டேன்
நான் அவளைச் சதுக்கத்திற் கொலையுண்ணக் கண்டேன்
நான் அவளைக் கண்டேன்-நான் அவளைக் கண்டேன்

இவளது பாதுகாவலன் யாரென்று
அவன் கத்தியபோது
நான் அவளை அறிவேன் என்பதை மறுத்தேன்
நான் அவளைச் சதுக்கத்தில் விட்டுச்சென்றேன்
நான் அவளைச் சதுக்கத்தில் குருதிவழிய விட்டுச்சென்றேன்
நான் அவளைச் சதுக்கத்திற் தடுமாற விட்டுச்சென்றேன்
நான் அவளைச் சதுக்கத்திற் சாக விட்டுச்சென்றேன்
நான் அவளைச் விட்டு.........

Samih-al-Qasim (தமிழில் சி.சிவசேகரம்)

******



நிபுணர்கள்

சந்தர்ப்பவாதிகளே
சந்தர்ப்பவாதத்தை
இழிவு செய்யுஞ்
சந்தர்ப்பங்கள் உண்டு

அவர்கள் சொல்வதை நம்புங்கள்
ஏனெனில் அவர்களே
எவரினும் மேலாகத்
தாம் சொல்வது என்னவென அறிவார்கள்

அவர்களை நம்பாதீர்கள்
ஏனெனில் அவர்கள்
சந்தர்ப்பவாதத்தின் காரணமாகவே
சந்தர்ப்பவாதத்தை இழிவு செய்கிறார்கள்

Erich Fried (தமிழில் சி.சிவசேகரம்)


கேள்வி 1. துரோகிகள் அடையக்கூடிய மிகப்பெரிய லாபம் எது?

அ) தாங்கொணா துயற்ற மக்களின் பிளந்த இதயத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட கோடிக்கணக்கான கேவல்களின் ஒலி

ஆ) இரத்தத்தால் நனைக்கப்பட்டு எதிர்பார்ப்பால் உலர்த்தப்பட்ட வாய்க்கரிசி

இ) எவரது பார்வையிலும் படாத அவர்களது கடைசி துளி கண்ணீர்

Wednesday, April 8, 2009

செருப்பாய் இருப்பதும் செருப்பை எறிவதும்





கேள்வி 1. 25 ஆண்டுகளுக்கு பிறகு யார் மேல் ஈழப் படுகொலைகளுக்காக செருப்பு வீசப்படும்?

அ) அப்போதைய உள்துறை மந்திரி
ஆ) அப்போதைய தமிழனத் தலைவர்
இ) அப்போதைய காங்கிரஸ் தலைவர்


கேள்வி 2. தமிழினத்துக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து யாது?

அ) தந்தியை மீண்டும் மீண்டும் பயன்படுத்துவது
ஆ) தனக்கே தந்தி கொடுத்துக்கொள்ளுவது
இ) தந்தியைக் கண்டுபிடித்தது

கேள்வி 3. தமிழினத்துக்கும் சீக்கிய இனத்துக்குமுள்ள முக்கிய வேறுபாடு?

அ) தவழ்ந்து போவது Vs தாடி வளர்ப்பது
ஆ) உணர்வுகளோடு இருப்பது
இ) செருப்பாய் இருப்பது Vs செருப்பை எறிவது

Monday, April 6, 2009

எதைப் பார்த்துச் சிரிப்பை அடக்க முடியலை?


கேள்வி 1. இந்தத் தலைப்பில் எந்த வார்த்தையைப் பார்த்துச் சிரிப்பை அடக்கமுடியவில்லை?

அ) இலங்கைத் தமிழர்கள்
ஆ) சம உரிமை
இ) வாழ்தல்

யார் ரொம்ப அப்பாவி?


கேள்வி 1. இப்படி லெட்டர் பேடு கொலைமுயற்சியில் யார் ரொம்ப அப்பாவி?

அ) கருணாநிதி
ஆ) விடுதலைப் புலிகள்
இ) போலிஸ்
ஈ) இந்த உத்தியை எத்தனை முறை பயன்படுத்தினாலும் தாங்கிற ரொம்ம்ம்ம்பப நல்லவனான நான்

கேள்வி 2. இதற்கு அடுத்த செய்தித் தலைப்பு என்ன?

அ) ஆயுதம் கடத்திய பு-உறுப்பினர் கைது
ஆ) சந்தேகத்து இடமான நபருக்கு உதவிய சினிமா இயக்குனர்/ அரசியல்வாதி கைது
இ) என் உயிரைத் தருவதுதான் இலங்கைத் (ஈழம் அல்ல) தமிழர்களுக்கு நல்லதெனில் 1000 முறை என் உயிரைத் தருவேன்.

காயம் அடைந்தவர்கள் பற்றிய முதல் கேள்வி


கேள்வி 1. காயம் அடைந்தவர்கள் என்ன பேசுவார்கள்?

அ) நாங்கள் இப்போது கொல்லப்படவில்லை
ஆ) நாங்கள் இப்போது ஓட்டு போட முடியும்
இ) நாங்கள் கொல்லப்பட்ட செய்தி இதை விட பெரிய தலைப்பில் வருமா இல்லை அப்போது வல்லரசின் தேர்தல் செய்திகளில் இடமற்று போய்விடுமா?

கேள்வி 2. யார் முட்டாள்?

அ) இந்தச் செய்தியை இந்தவருடத்தில் மட்டும் 122வது முறையாக வெளியிடும் பத்திரிக்கை.
ஆ) இந்தச் செய்தியை இந்தவருடத்தில் மட்டும் 12வது முறையாக படிக்கும் நான்
இ) இதையெல்லாம் போய் ஒரு விசயமாகச் சொல்லிக்கொண்டிருக்கும் அந்த காயம்பட்ட துரதிர்ஷ்ட்டசாலி